அப்போது பிரபாகரன் என்ற நிர்வாகி தனது இடுப்பை கிள்ளிவிட்டதாக அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நகர செயலாளரிடம் புகார் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே, செயல் தலைவர் ஸ்டாலினின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வேன் என ஜெயமணி கூறினார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறிய பின்பு ஜெயமணி சமாதானம் அடைந்தார்.