திமுக 120 தொகுதிகளில் வெற்றி பெறும்: புதிய கருத்துக்கணிப்பில் தகவல்

வெள்ளி, 13 மே 2016 (12:27 IST)
வருகிற சட்டசபை தேர்தலில் திமுக 120 தொகுதிகளி வெற்றி பெறும் எனவும் அதிமுக 94 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.


 
 
தமிழ்கத்தில் வருகிற 16-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. யார் வெற்றி பெறுவார் என்று சற்றும் யூகிக்க முடியாத இந்த தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என பலவேறு கருத்துக்கணிப்புகள் தினமும் வெளிவருகின்றன.
 
இந்நிலையில் லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மையம் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் 42.7 சதவீத ஆதரவுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது.
 
இந்த கருத்துக்கணிப்பில் கட்சிகள் பெறும் இடங்கள்:
 
திமுக: 118 முதல் 120 இடங்கள்
அதிமுக: 94 முதல் 96 இடங்கள்
காங்கிரஸ்: 8 முதல் 10 இடங்கள்
மக்கள் நல கூட்டணி: 6 முதல் 8 இடங்கள்
பாமக: 5 முதல் 7 இடங்கள்
பாஜக: 1 முதல் 3 இடங்கள்
மற்ற கட்சிகள்: 2 முதல் 4 இடங்கள்
 
கட்சிகளுக்கு மக்களின் ஆதரவு:
 
திமுக-காங்கிரஸ் கூட்டணி: 42.7 சதவீத மக்கள் ஆதரவு
அதிமுக: 36.6 சதவீத மக்கள் ஆதரவு
தேமுதிக-மக்கள் நல கூட்டணி: 7.9 சதவீத மக்கள் ஆதரவு
பாமக: 3 சதவீத மக்கள் ஆதரவு
சீமான்: 1.3 சதவீத மக்கள் ஆதரவு
இதர கட்சிகள்: 9.2 சதவீத மக்கள் ஆதரவு
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்