மாநிலத்தில் யார் ஆட்சியை பிடிப்பது என சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஆளுநர் இன்றுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. சசிகலா தனக்குதான் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அதிகமாக உள்ளது என்று கூறி வருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஓ.பி.எஸ். சசிகலா எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்திருப்பதாக ஆளுநரின் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து ஆளுநரை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு கடந்த 9 மாதங்களாக முடங்கியுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
தற்போது இன்று நடைப்பெற உள்ள திமுக கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழல் விவாதிக்கப்பட உள்லது என்று கூறப்படுகிறது. மேலும் ஆளுநர் மாநிலத்தில் நிலையான ஆட்சியை வழங்க முடியவில்லை என்றால் தேர்தல் நடத்த வேண்டும். அதற்கு திமுக தயாராக உள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.