பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க சார்பில் சாலைமறியல் போராட்டம்

திங்கள், 29 ஜனவரி 2018 (19:15 IST)
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா, சின்னதாரபுரத்தில் பஸ்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திமுக ஒன்றிய செயலாளர் கருணாநிதி  தலைமையில் திமுக காங்கிரஸ்,மதிமுக,மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுடன் இணைந்து பஸ் மறியல் போரட்டம் சின்னதாரபுரம் பேருந்து நிலையம்  பகுதியில் நடத்தினார்கள்.




அப்போது பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுற்த்தி பல்வேறு கோசங்களை எழுப்பினர்,மறியல் போரட்டத்தில் 100 க்கும் அதிகமோனர் கலந்து கொண்டனர்,பின்னர் மறியல் கலந்து கொண்ட 120பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

 

 
கரூர் சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்