விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் திமுக.. யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

Siva

திங்கள், 16 செப்டம்பர் 2024 (14:05 IST)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் திமுகவின் இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிப்படுத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுவிலக்கு தமிழ் நாட்டில் அமலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்றும், நிர்வாக சிக்கல்களை கருத்தில் கொண்டு, படிப்படியாக அது நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார் என்றும் திருமாவளவன் கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்தார். இந்த சந்திப்பு முடிந்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார். அமெரிக்க சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து தமிழகத்திற்கு திரும்பிய முதல்வருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கவும், அவரது பயணத்தால் தமிழகத்திற்கு ஏற்பட்ட முதலீட்டு வாய்ப்புகளை பாராட்டவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறவுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில், மதுபானக் கடைகள் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்கும் கோரிக்கையும், தேசிய அளவில் மதுவிலக்கை அமல்படுத்த அரசியல் சாசனத்தின் 47-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் முன்வைக்கப் போவதாக தெரிவித்தார்.

மேலும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுகவின் சார்பில்   ஆர்.எஸ். பாரதி மற்றும்  டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்பார்கள் என ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக திருமாவளவன் கூறினார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்