கிருஷ்ணரைப் பற்றி வீரமணி தவறாகப் பேசவில்லை – ஸ்டாலின் விளக்கம் !

சனி, 6 ஏப்ரல் 2019 (15:12 IST)
கிருஷ்ணர் குறித்து கி . வீரமணி தவறாக எதுவும் பேசவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த வாரம் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவங்கள் பற்றி கடுமையாகப் பேசினார். அப்போது ‘ பொள்ளாச்சி சம்பவத்துக்கு கிருஷ்ணர்தான் முன்னோடி. பெண்களின் துணியை எடுத்துக்கொண்டு அவர்களை வம்பிழுத்தவர் கிருஷ்ணர்’ எனக் கூறினார்.

இதனை இந்து அமைப்புகள் மற்றும் ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகள் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தினர்.  திருச்சியில் கி.வீரமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, தி.கவினர் மீது இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கற்களையும் செருப்பையும் வீசித் தாக்குதல் நடத்தினர். இதற்குக் கடுமையான கண்டனங்களை அரசியல் கட்சி தலைவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

வீரமணியின் பேச்சு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் ‘கிருஷ்ணரைக் கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர் இதைப் பேசவில்லை. அதை ஒரு உதாரணமாகவே அவர் பேசியுள்ளார். ஆனால் ஊடகங்களும் ஆர் எஸ் எஸ் அமைப்பும் இதைத் தவறாக சித்தரிக்கின்றன. கி வீரமணி அப்படி எதுவும் தவறாகப் பேசவில்லை.
குலம், ஒருவனே தேவன் என்பதுதான் அண்ணாவின் கொள்கை. திமுகவில் 90 சதவிகிதம் இந்துக்கள்தான்  இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய துணைவியார் கூட தினமும் கோவிலுக்குச் சென்றுகொண்டுதான் உள்ளார். அவரை ஒருநாளும் நான் கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று சொன்னதில்லை’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்