ஊழல் பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை...! எல்.முருகன் சரமாரி புகார்..!!

Senthil Velan
திங்கள், 18 மார்ச் 2024 (16:42 IST)
ஊழல் பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை என்றும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் மிகப்பெரும் ஊழலை தி.மு.க.வின் ஆ.ராசா செய்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
 
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பிரதமரின் தமிழக வருகை பாஜகவை வலுப்படுத்துவதோடு, பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது என்றார்.
 
தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் தேசத்திற்கு எதிரானவர்கள் என்றும் தேசிய வளங்களை கொள்ளை அடித்து ஊழல் செய்யும் கட்சிகள் என்றும் அவர் விமர்சித்தார்.
 
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் மிகப்பெரும் ஊழலை தி.மு.க.,வின் ஆ.ராசா செய்துள்ளதாக குற்றம் சாட்டிய முருகன், இந்த வழக்கில் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார். ஊழல் பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை என்றும் அவர் கூறினார்.

ALSO READ: அதிமுக தேர்தல் அறிக்கை..! எடப்பாடியிடம் ஒப்படைத்த தேர்தல் குழு!
 
கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த நல்லாட்சியை பிரதமர் வழங்கி வருகிறார் என்றும்  அடுத்த 25 ஆண்டுகளுக்கு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றும் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்