இந்தக் கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழக அரசியல் கட்சிகள் யாரும் திமுகவை ஏற்று கொள்ள மறுக்கின்றனர். திமுக ஒரு மூழ்கும் கப்பல். அதில் யாரும் பயணிக்க மாட்டார்கள். தற்போது கூட்டணிக்கு வாங்க என கூவி, கூவி மு.க.ஸ்டாலின் எல்லோரையும் அழைக்கிறார். ஆனால், யாரும் அந்த கூட்டணிக்கு செல்ல மறுக்கின்றனர்.