மேலும், சட்ட மன்றத் தேர்தல் கூட்டணி இன்னும் முடிவாகாததால் பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில், சென்னை திமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, திமுக பொருளாளராக உள்ள மு.க.ஸ்டாலின் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவில் தற்போது பொதுச் செயலாளராக உள்ள பேராசிரியர் அன்பழகன் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி வரும் சட்ட மன்றத் தேர்தலில் நிற்க மாட்டேன் என்று அறிவித்தது குறிப்பிடதக்கது. அதுபோலவே, தனது பொதுச் செயலாளர் பதவியையும் விட்டுக்கொடுக்க அவர் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.