லெட்சுமி இன்று காலை 11 மணி அளவில் தனது வீட்டு அருகில் சென்ற போது மர்ம நபர்கள் சிலர், அவரை வழி மறித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக லட்சுமியை வெட்டினர்.
இதனைக் கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள், லட்சுமியை மீட்டு உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே லட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆரம்பகட்ட விசாரணையில், லெட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்தவருக்கும் இடையே பண விவகாரத்தில் பிரச்சனை இருந்தது தெரியவந்தது.