தேர்தல் தருணத்தில் சமூகவலைதளம் உள்ளிட்ட பல்வேறு திசைகளிலும் வாக்காளர்கள் தங்களது பார்வையை செலுத்தி வரும் நேரத்தில், தங்களுக்கு பிடிக்காத வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே, இது போன்ற தனிமனித தாக்குதல் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எரியாவிட்டால், வரும் காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள முக்கிய தலைவர்களே பதம் பார்க்கும் நிலை உருவாகலாம்.