2006 ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, திமுக சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இலவச கலர் டிவி உள்ளிட்ட பல கவர்ச்சி அறிவிப்புகள் வெளியானது. இந்த தேர்தல் அறிக்கையை பொது மக்கள் விரும்பி திமுகவுக்கு வாக்களித்தனர். இதனால், திமுக அப்போது ஆட்சியை பிடித்தது.
இது குறித்து, திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறுகையில், திமுக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி, தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்றார்.