தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக அமொக வெற்றி பெற்று, கடந்த 23 ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். அவருடன் அவரது கட்சியைச் சேர்ந்த 28 அமைச்சர்களும் குழுகுழவாக பதவியேற்றுக் கொண்டனர். மேலும், சட்டசபை தற்காலிக சபாநாயகராக செம்மலை நியமிக்கப்பட்டார்.
அதுபோலவே, திமுக சார்பில் 89 பேர் வெற்றி பெற்றனர். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் 8 பேரும், இந்திய யூனியன் முஸ்லீம் லிக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றனர்.