தேமுதிக எம்.எல்.ஏ. திடீர் கைது

திங்கள், 28 செப்டம்பர் 2015 (23:27 IST)
கோவையில், தேமுதிக எம்.எல்.ஏ. தினகரனை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
கோவை மாவட்டம், சூலூர் தொகுதியை, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாக கூறி, தேமுதிக எம்.எல்.ஏ. தினகரன், கோவை மாவட்ட கலெக்டர்  அலுவலகத்திற்கு,  பொதுமக்களுடன் வந்து, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
 
அப்போது, செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ. தினகரன் கூறுகையில், சட்ட மன்றத்தில் கடந்த 4 வருடமாக சூலூர் தொகுதியின் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், அதை அரசு  கண்டுகொள்ளவில்லை. தேமுதிக எம்.எல்.ஏ. என்ற ஒரே காரணத்துக்காக எனது தொகுதி புறக்கணிப்படுகிறது.
 
விசைத்தறித் தொழில் மற்றும் ஜவுளி சந்தை உள்ளிட்ட, பல மக்கள் பிரச்சனை குறித்து கோரிக்கைகளை கலெக்டரிடம் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. அவர், அதிமுக மகளிர் அணிச் செயலாளர் போல செயல்படுகிறார் என்று  குற்றம் சாட்டினார்.
 
இதையடுத்து போலீசார் எம்.எல்.ஏ. தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்க எம்.எல்.ஏ. மறுத்துவிட்டார். இதனால், அவரையும், அவருடன் போராட்டம் நடத்திய சுமாரக் 50 பேரை போலீசார் கைது செய்தனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்