தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார், கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதாவும், சுதீஷூம் கவனித்து வருகின்றனர். இவர்கள் எடுக்கும் பல முடிவுகளால் தேமுதிக தொண்டர்களே அதிருப்தியில் உள்ளனர்.
அதிமுகவிடம் 7 தொகுதிகளை கேட்டது தேமுதிக இதற்கு அதிமுக தரப்பு சம்மதிக்காததால், இதனை பயன்படுத்திக்கொள்ள நினைத்த திமுக அவர்களுடன் கூட்டணி குறித்து பேசியது. அதுவும் ஒத்துவராத நிலையில் திமுக, தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என முடிவு செய்து ஒதுங்கியது.
ஆனால், தேமுதிகவின் முக்கிய தலைகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து துரைமுருகன், தேமுதிக தரப்பில் சுதீஷ் போன் செய்து, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் திமுக வழங்குவதற்கு சீட் இல்லை என மறுத்துவிட்டாதாகவும் கூறினார். சுதீஷ் துரைமுருகன் கூறிய இந்த செய்தியை ஒப்புக்கொண்டார்.