கேப்டனுக்கு "குட்பை" - அதிர்ச்சியில் விஜயகாந்த்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2016 (11:22 IST)
தேமுதிக நிர்வாகிகள் பலர் மாற்றுக் கட்சிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானதால், விஜயகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
நடைபெற்ற தேர்தலில், தமாகா, மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைத்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தனர்.
 
தேமுதிக நிர்வாகிகள் பலரும் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விஜயகாந்த் காதில் வாங்காக காரணத்தினால், தேமுதிக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்து, கட்சி மாற திட்டமிட்டனர். பல முக்கிய நிர்வாகிகள் கேப்டனுக்கு குட்பை சொல்லிவிட்டு, திமுக மற்றம் அதிமுக கூடாரம் நோக்கி எஸ்கேப்பாகிவிட்டனர்.
 
இந்த நிலையில், இருப்பவர்களும் தன்னைவிட்டு போகக் கூடாது என நினைத்து அதற்கு தகுந்தார் போல் கேப்டன் ரகசியமாக காய் நகர்த்தி வருகின்றாராம்.
 
ஆனால், தேர்தலில் தங்களது தோல்விக்கு காரணமாக இருந்த தேமுதிக கூடாரத்தை காலி செய்தே தீருவது என  முன்பைவிட திமுக புலிப் பாய்ச்சல் காட்டிவருகின்றதாம்.
 
ஆனால், ஆளும் கட்சிக்கு சென்றால் 5 வருடத்தில் லைப்பில் செட்டிலாகிவிடலாம் என தேமுதிக நிர்வாகிகள் பலரும் அதிமுக பக்கம் பார்வையைத் திருப்பிவருகின்றார்களாம்.
 
விஜயகாந்த் அதிர்ச்சி, தேமுதிக, திமுக, நிர்வாகிகள் கட்சி தாவல், சென்னை கேப்டனுக்கு "குட்பை" - அதிர்ச்சியில் விஜயகாந்த்
 
தேமுதிக நிர்வாகிகள் பலர் மாற்றுக் கட்சிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியானதால், விஜயகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
நடைபெற்ற தேர்தலில், தமாகா, மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைத்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தனர்.
 
தேமுதிக நிர்வாகிகள் பலரும் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விஜயகாந்த் காதில் வாங்காக காரணத்தினால், தேமுதிக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்து, கட்சி மாற திட்டமிட்டனர். பல முக்கிய நிர்வாகிகள் கேப்டனுக்கு குட்பை சொல்லிவிட்டு, திமுக மற்றம் அதிமுக கூடாரம் நோக்கி எஸ்கேப்பாகிவிட்டனர்.
 
இந்த நிலையில், இருப்பவர்களும் தன்னைவிட்டு போகக் கூடாது என நினைத்து அதற்கு தகுந்தார் போல் கேப்டன் ரகசியமாக காய் நகர்த்தி வருகின்றாராம்.
 
ஆனால், தேர்தலில் தங்களது தோல்விக்கு காரணமாக இருந்த தேமுதிக கூடாரத்தை காலி செய்தே தீருவது என  முன்பைவிட திமுக புலிப் பாய்ச்சல் காட்டிவருகின்றதாம்.
 
ஆனால், ஆளும் கட்சிக்கு சென்றால் 5 வருடத்தில் லைப்பில் செட்டிலாகிவிடலாம் என தேமுதிக நிர்வாகிகள் பலரும் அதிமுக பக்கம் பார்வையைத் திருப்பிவருகின்றார்களாம். 
அடுத்த கட்டுரையில்