சகாயத்தின் பணியை அரசு தடுக்கின்றது: விஜயகாந்த் குற்றச்சாட்டு

திங்கள், 14 செப்டம்பர் 2015 (23:20 IST)
சட்ட ஆணையர் சகாயத்தை பணி செய்யவிடாமல் அரசு தடுப்பதாக விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
தர்மபுரியில் தேமுதிக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது விஜயகாந்த் பேசியதாவது:- 
 
அதிமுக அரசு மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாமல் மனம் போன போக்கில் செயல்படுகிறது. இந்த அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். காரணம், எல்லாத்துறைகளிலும் ஊழல் மலிந்து கிடைக்கின்றது. இதைச் சொன்னால் கோபம் வருகிறது. வழக்கு போடுகிறார்கள். எனக்கு எந்த வழக்கை கண்டும் பயம் இல்லை. நான் கூறும் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் ஆதாரம் வைத்துக் கொண்டுதான் பேசுகிறேன். மனம் போன போக்கில் பேசுவதில்லை.
 
குறிப்பிட்டுச் சொன்னால், தமிழகத்தில் கிரானைட் ஊழலை சொல்லலாம். கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்கும் நேர்மையான அதிகாரி சகாயத்தை பணி செய்யவிடாமல் அரசு தடுக்கிறது. திருமணத்தில் சீப்பை மறைந்துவிட்டால், கல்யாணமே நின்றுபோய்விடும் என சிலர் நினைக்கின்றனர். அது போன்று நினைப்பவர்கள் மக்கள் மன்றத்தில் ஒருநாள் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்