ஈரோடு கிழக்கு: சுயேட்சையை விட குறைவாக வாக்கு பெற்ற தேமுதிக வேட்பாளர்..!

வியாழன், 2 மார்ச் 2023 (11:47 IST)
ஈரோடு கிழக்கு தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் சுமார் 20000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் என்பதும் அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு உள்ளார், மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த தொகுதியில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் என்பவர் போட்டியிட்ட நிலையில் அவர் சுயேட்சையை விட குறைவான வாக்குகள் பெற்றிருப்பது அக்காட்சியின் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவில் சுயேச்சை வேட்பாளர் முத்துபாவா என்பவர் 178 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்
 
இதிலிருந்து தேமுதிக கட்சி மிகப்பெரிய அளவில் தனது வாக்கு வங்கியை இழந்து உள்ளது என்பது உறுதியாகி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்