முதல்வரை பார்த்து நலம் விசாரிக்க பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், சினிமா துறையினர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தவாறே உள்ளனர். இந்நிலையில் இயக்குனர் வ.கவுதமன் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மேயர் சைதை துரைசாமி ஆகியோரை அவர் சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவுதமன், முதல்வரின் உடல்நிலை பற்றி நம்பிக்கையோடு அமைச்சர் பேசியது வெளியே பிதற்றிக்கொண்டிருக்கும் புரளிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதாக இருந்தது. மேலும், நான் சந்திக்க சென்றதின் ஒரே நோக்கம் ஏழு பேர் விடுதலையிலும், ஈழத்தின் விடுதலையிலும் முதல்வருக்கு இருந்த உறுதியான நிலைப்பாடுதான் என்றார்.
முதல்வர் எழுந்து வரவேண்டும், அவரால் தமிழர் நிலங்களில் பல மாற்றங்கள் நிகழவேண்டும். வாழ்த்த வயது தேவையில்லை என்பதால் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். உங்களால் முடியும், பழைய வலிமையோடு விரைவில் எழுந்து வாருங்கள் முதல்வர் அவர்களே என்றார்.