19 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு முதல்வரை எப்படி மாற்றமுடியும் என்ற கேள்விக்கு பதில் அளித்த மாரியப்பன் கென்னடி, 135 எம்எல்ஏக்களும் அம்மாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அம்மா இல்லை என்றால், இவர்கள் எல்லாம் சும்மா ஆனால் இவர்கள் அதை மறந்துவிட்டனர்.
முதல்வரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதுபோல தெரியலாம். ஆனால் தினகரன் மீது பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் ஓபிஎஸ் அணியிலும் இருக்கிறார்கள் எடப்பாடி அணியிலும் இருக்கிறார்கள். நேரம் வரும்போது அவர்கள் வெளியே வருவார்கள் என தெரிவித்தார்.