சித்தி சசிகலா; சந்திக்க சென்ற மகன் தினகரன்: இதுல அரசியல் என்ன இருக்கு!

புதன், 21 ஜூன் 2017 (09:05 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவை அவரால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அவரது அக்காள் மகன் தினகரன் நேற்று சிறைக்கு சென்று சந்தித்தார்.


 
 
இதற்கு முன்னர் பலமுறை தினகரன் சந்தித்தாலும், இந்த முறை பாஜக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்து அதிமுகவிடம் ஆதரவு கேட்ட பின்னர் சசிகலாவை தினகரன் சந்திக்க சென்றிருந்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.
 
இந்த சந்திப்பின் போது தினகரன் நிச்சயம் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கலாமா மற்றும் அமைச்சர்களின் நிலைப்பாடு உள்ளிட்டவற்றை நிச்சயம் சசிகலாவிடம் விவாதித்திருப்பார்.
 
ஆனால் சசிகலாவை சந்தித்து விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், சித்தி என்ற முறையில் சசிகலாவை சந்திக்க வந்துள்ளேன். அவரிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றார். மேலும் குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்தும் எதுவும் ஆலோசிக்கவில்லை. குடியரசுத்த லைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பது குறித்து சசிகலா முடிவு செய்வார் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்