இன்று திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா அதிகாலையில் தொடங்கப்பட்டது. வழக்கமாக தீபத்திருவிழா தொடங்கும்போது பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு உள்ள சூழலை கருத்தில் கொண்டு கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபத்திருவிழாவிலும் குறிப்பிட்ட அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல இன்று திருச்செந்தூரில் நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் வழக்கமாக கலந்து கொள்வர். ஆனால் இன்று பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்வில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியே நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பக்தர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.