பழங்குடியினருக்கு டிக்கெட் வழங்க மறுப்பு.! திரையரங்கம் மீது போலீசில் புகார்..!!

Senthil Velan

சனி, 1 ஜூன் 2024 (14:10 IST)
கடலூரில் நாடோடி பழங்குடியின மக்களுக்கு திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
கடலூரில் உள்ள 'நியூ சினிமா' திரையரங்கில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள 'கருடன்' திரைப்படத்தை பழங்குடியின மக்கள் பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திரையரங்கு நிர்வாகம் அவர்களுக்கு டிக்கெட் வழங்கவில்லை என சொல்லப்படுகிறது.

டிக்கெட் வழங்காதது குறித்து திரையரங்க நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்காததால், இதுகுறித்து பழங்குடியின மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ALSO READ: ஜூன் 4-க்கு பிறகு மோடி சும்மா தான் இருப்பார்..! நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல்..!!
 
ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கடலூரில் தற்போது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்