ஆவின் பச்சை நிற பாலுக்கு பதிலாக 'டிலைட் பால்'- அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (19:31 IST)
தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை 25 ஆம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில்  இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். 

நவம்பர் 25 முதல் பச்சை நிற பால் விற்பனை நிறுத்தப்படுவதாகவும் அதற்கு பதிலாக டிலைட் ஊதா நிற பால் விற்பனை செய்யப்படும் என்றும் ஆவின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை 25 ஆம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், 'ஆவின் பச்சை நிற பாலை பொறுத்தவரை பசும்பாலில் 1% கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்கப்பட்டு வருகிறது. அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், இன்றைய வாழ்க்கை தரத்திற்கு இந்த கொழுப்பு தேவையில்லாத ஒன்றாகும். எனவே அதற்குப் பதிலாக ஊதா  நிற டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம்' என்று கூறியுள்ளார்.

மேலும், இதில், 'எந்த லாப நோக்கமும், வியாபாரம் உத்தியும் இல்லை, பசும்பாலின்  தரத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்