போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தூங்கி எந்திரிச்சு அறிக்கை விட்ட தீபா!

புதன், 10 ஜனவரி 2018 (18:23 IST)
தமிழக முழுவதும் கடந்த ஒரு வார காலமாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
 
போராட்டம் ஆரம்பிச்சு ஒரு வார காலம் ஆகிவிட்டது. பொதுமக்கள் உட்பட பல்வேறு கட்சியினர் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அரசின் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். பல அரசியல் தலைவர்கள் அறிக்கை விட்டும், பேட்டிகள் மூலமாகவும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
ஆனால் தற்போது தான் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தீபா அறிக்கை வெளியிட்டுள்ளார். இவ்வளவு நாள் தீபா என்ன செய்துகொண்டிருந்தார் என பலர் கேள்வி எழுப்புகின்றனர். காலம் தாழ்த்தி வந்திருக்கும் தீபாவின் இந்த அறிக்கையால் எதுவும் நடந்துவிடப்போவது இல்லை என கூறுகின்றனர்.
 
இது தொடர்பாக தீபா வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதாவின் அரசு என அடிக்கடி இந்த அரசு கூறும் போது அவர் எப்போதும் மக்களால் இந்த அரசு, மக்களுக்காகவே இந்த அரசு என செயல்பட்டதையும் நினைவில் வைத்து துரிதமாக செயல்பட்டு பண்டிகை நாட்களில் போக்குவரத்து தொழிலாளர்களையும் பொதுமக்களையும் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் இருக்கச் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்