மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என அதிமுகவினர் அழைப்பர், தற்போது சசிகலாவை சின்னம்மா என அழைக்கின்றனர். திமுக தலைவர் கருணாநிதியை கலைஞர் எனவும் ஸ்டாலினை தளபதி எனவும் அழைக்கின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவையும் அவரது ஆதரவாளர்கள் பட்டப்பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன்னர் தினமும் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ள தீபா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் தீபாவை அவரது ஆதரவாளர்கள் மக்கள் தலைவி என அடைமொழி வைத்து அழைக்க ஆரம்பித்துள்ளனர்.