தேர்தலை புறக்கணிக்க முடிவு: ஜல்லிக்கட்டு தடையால் தீவிரமடையும் மக்கள் போராட்டம்

செவ்வாய், 12 ஜனவரி 2016 (15:56 IST)
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு, உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 
 
குறிப்பாக தென் மாவட்ட மக்கள் இந்த இடைக்கால தடைக்கு எதிராக மிகுந்த கோபத்தில் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். ஆங்காங்கே கடையடைப்பு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
 
ஜல்லிக்கட்டு நடத்த சாதகமான தீர்ப்பு வரும் வரைக்கும் தங்களது போராட்டம் ஓயாது என ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன அலங்காநல்லூர் பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கூறிவருகின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என்ற மகிழ்ச்சியில் போட்டிக்காக தயாராகிக் கொண்டிருந்த அலங்காநல்லூரில், தடை விதிக்கப்பட்ட செய்தி தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருவதாக  பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்