அப்பா தின நாள்.... அப்பா - அன்றும்- என்றும்

சனி, 19 ஜூன் 2021 (18:13 IST)
நம் வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத ஒரு முகம் அப்பா. நாம் இந்த உலகத்தை முதலில் பார்ப்பதற்கு முன்னமே நமக்கு அம்மா வயிற்றில் முத்தம் கொடுத்து  எப்போது நாம் வரவோம் என ஆசையுடன் கார்த்திருந்தவர் அப்பா.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கிணங்க அப்பாவின் ஒவ்வொரு சொல்லும் நம்மை வாழ்க்கையில் வெற்றிக்கு அழைத்துச் செல்லும் மந்திரமாகவே மாறியிருப்பதை நாம் முன்னேறிய பின்பே தெரிந்துகொள்வோம்.

இன்றைக்கு கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பஃபெட்டில் தலைமைச் செயலதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சை. அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்லும்போது, அவரது அப்பாவின் ஒருவருடச் சம்பளம் செலவானதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்று அவரது சம்பளமாக மொத்தம் பல ஆயிரம் கோடி பெற்றுள்ளார். அவரது ஆர்வத்திற்கு அவரது தந்தை கொடுத்த ஊக்கமே இதற்குக் காரணம் ஆகும்.

சில கண்டிப்புகளுக்காக அப்பாவை பிள்ளைகள் வெறுப்பது இன்றைக் காலத்தில் அதிகரித்து வருகிறது. அப்பாவின் அன்பான் சொற்கள் மட்டுமல்ல அவரது கண்டிப்புகளும் நமது வாழ்க்கையை உயர்த்தும் என்பதை உணரும் பிள்ளைகள் நாளையே உலகை ஆளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்