வங்கக் கடலில் உருவானது புயல்: கன மழைக்கு வாய்ப்பு!

செவ்வாய், 25 அக்டோபர் 2016 (15:53 IST)
வங்கக்கடலில் விசாகப்பட்டினம் அருகே நீடித்து வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


 
 
விசாகப்பட்டினம் அருகே வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வடக்கு நோக்கி நகர்கிறது. இதனால் கடலூர், பாம்பன், நாகை, தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 
வடமேற்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்குவதற்கு அச்சாரமாக இந்த புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் மழை துவங்க உள்ளதால், இந்த தீபாவளியை மழையில் தான் மக்கள் கொண்டாட வேண்டிய சூழல் வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்