சிஆர் சரஸ்வதி ஒரு அரசியல் ‘வியாதி’: நிர்மலா பெரியசாமி ஆவேசம்!

செவ்வாய், 21 மார்ச் 2017 (13:31 IST)
அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி இன்று மாலை சசிகலா அணியில் இருந்து ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்துக்கொள்ள இருக்கிறார். நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கடும் வாக்குவாதத்திற்கு பின்னர் இந்த முடிவை அறிவித்துள்ளார் நிர்மலா பெரியசாமி.


 
 
ஆர்கே நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மக்கள் ஆதரவு உள்ளதால் அவர் அதிகப்படியான வாக்குகளை பெறுவார் என நிர்மலா பெரியசாமி பேசியதால் கூட்டத்தில் இருந்த வளர்மதி, சிஆர் சரஸ்வதி போன்றோர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதில் அவர்கள் மிகவும் கீழ்த்தரமாக அரசியல் நாகரிகம் இன்றி நடந்து கொண்டதாகவும், தன்னை மோசமாக திட்டியதாகவும் நிர்மலா பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து இன்று மாலை ஓபிஎஸ் அணியில் சேர உள்ள நிர்மலா பெரியசாமி தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைப்பேசி வழியாக பேட்டியளித்தார்.
 
அதில் பேசிய நிர்மலா பெரியசாமி வளர்மதி, சிஆர் சரஸ்வதி நாகரிகம் இன்றி பேசியதாகவும். தன்னை கட்சியை விட்டு வெளியே செல்லுமாறு அவர் கூறினர். இதனை கூற அவர்களுக்கு தகுதியில்லை. சிஆர் சரஸ்வதி எல்லாம் ஒரு அரசியல்வாதியா? அவர் அரசியல் வியாதி என்றார் ஆவேசமாக.
 
மேலும் அதிமுகவில் உள்ள 90 சதவீதம் பேர் ஓபிஎஸ் அணிக்கு செல்லும் மனநிலையில் தான் உள்ளதாக அவர் கூறினார். தன்னை போல பலரும் வரும் காலங்களில் வரிசையாக வருவார்கள் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்