​கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜிற்கு ஜாமின் மறுப்பு

வெள்ளி, 22 ஜனவரி 2016 (16:03 IST)
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான யுவராஜின் ஜாமின் மனுவை நாமக்கல் முதன்மை மற்றும் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 
 
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்த தலித் மாணவர் கோகுல்ராஜ், காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியாவும் சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
 
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்பட்ட யுவராஜை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் இருந்து ஜாமின் வழங்கக் கோரி நாமக்கல் முதன்மை மற்றும் மாவட்ட அமர்வு நீதிமன்றதச்யுவராஜ் தரப்பி்ல் 2வது முறையாக தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்ததது.
 
அப்போது, யுவராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஜாமினில் விடுவித்தால் சாட்சியங்களை கலைத்துவிட வாய்ப்புள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார். இவரது வதத்தை ஏற்று யுவராஜின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி எஸ்.ராமதிலகம் உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்