இதை விசாரித்த நீதிபதிகள் “டியூஷன் சென்டர்கள் மற்றும் வீடுகளில் டியூஷன் நடத்தும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான முறைகேடுகள், புகார்கள் தெரிவிக்க தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண் போன்றவற்றை உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணித்தரம், கற்பிக்கும் விதம், கல்வித்தரம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீடு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.