அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த பிரச்சாரத்துக்காக பிரதானக் கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கே கே மகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்துள்ளார்.
அவரது மனுவில் ‘திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது அதிகரித்துள்ளது. மேலும் பொதுக்கூட்டங்களுக்காக மக்களைப் பணம் மற்றும் உணவு ஆகியவற்றைக் கொடுத்து அழைத்து வருகின்றனர். திமுக, அதிமுக, அமமுக ஆகிய பிரதானக்ட கட்சிகள் வாக்காளர் ஒருவருக்கு ரூபாய் 1,000 வரை கொடுக்கப்படுகிறது. ஆனால் பொய்யான தேர்தல் செலவுக் கணக்கைக் காட்டி தேர்தல் ஆணையத்தை ஏமாற்றுகின்றன. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தலை நடத்தினால் அது நியாயமாக இருக்காது. அதனால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.’ எனக் கூறியிருக்கிறார்.