அரசு பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு.! மகா விஷ்ணுவுக்கு சொந்தமான அறக்கட்டளையில் போலீசார் விசாரணை..!

Senthil Velan

வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (13:39 IST)
அசோக் நகர் அரசுப்பள்ளியில் பிற்போக்கு சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணு என்பவருக்கு சொந்தமான திருப்பூர் குளத்துப் பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை மையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
 
சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் மகா விஷ்ணு என்பவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
 
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியிருக்கிறார். அப்போது இப்படி மதரீதியாக மாணவர்களிடம் பேச வேண்டாம் என மாற்றுத் திறனாளி ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். 
 
அதற்கு அந்த சொற்பொழிவாளரான மகாவிஷ்ணு மைக்கில் பேசி அவரை அவமானப்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. 
 
இந்த விவகாரம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இதனிடையே சென்னை அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


ALSO READ: பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே டாஸ்மாக் கடைகள் அமைப்பது ஏன்.? அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி..!!
 
இந்நிலையில் அசோக் நகர் அரசுப்பள்ளியில் பிற்போக்கு சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணு என்பவருக்கு சொந்தமான திருப்பூர் குளத்துப் பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை மையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்