தொடரும் சர்ச்சை பேச்சு...உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார்.

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (18:49 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அரசியலில் பரப்புரன் நகர்கிறது.ஒவ்வொரு கட்சியும் எதிர்கட்சிகளை விமர்சிப்பதும் அவர்கள் இவர்களை விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
அதேசமயம் ஒவ்வொரு வேட்பாளரும் புதுப்புதுப் பாணியில் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக நட்சத்திரப் பேச்சாளர் ஆ.ராசா முதல்வரிஒன் தாயார் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதையடுத்து, திண்டுக்கல் லியோனி இதேபோல் பேசி சர்ச்சையில் சிக்கினார்.  இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான உதயநிதி, பாஜக அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ்,அருண்ஜெட்லி, குறித்து தவாறாகப் பேசியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, இன்று இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான உதயநிதி,மீது   தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கபப்ட்டுள்ளது அவரது தேர்தல் பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்