புதுச்சேரியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி தான் பிரதான கட்சியாக இருந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தான் திமுக இருந்தது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் முக்கிய கட்சியான காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் திமுக ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.