இதனால், இரண்டு வழக்கையும் இணைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்
தேடப்பட்டு வந்த யுவராஜ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவகத்தில் சரண் அடைந்தார். இதனால், நாமக்கல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிபிசிஐடி போலீலார் அவரிடம் விசாரணை நடத்தினர்.