கடந்த 13ஆம் தேதி அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும்,ஆர்எஸ்எஸ் அமைப்பினையும் தவறாக சித்தரித்து பொதுமக்கள் மனதில் விரோத மானபான்மையையும் தவறான பிம்பத்தையும் உண்டாக்கும் நோக்கத்துடன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சில குண்டர்கள் பொதுமக்களிடம் பிட் நோட்டீஸ் விநியோகித்துள்ளனர்.
அப்போது பாஜக மதுரை மாநகர துணைத் தலைவர் கீரைத்துறை குமார் என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியினரை தட்டி கேட்டுள்ளார் இதற்கு ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சில குண்டர்கள் குமாரை சரமாரியாக தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர் தற்போது குமார் என்பவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாருக்கு தற்போது வரை போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாக்கியவர்கள் மீது காவல்துறையினர் இதுவரை எந்த ஒரு வழக்கு பதிவும் செய்யவில்லை. எனவே, மதுரை மாநகர காவல் ஆணையாளர் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழகர் கோவில் சாலையில் உள்ள மதுரை மாநகர காவல் ஆணையாளரிடம் பாஜக வழக்கறிஞர் பிரிவு அணியினர் புகார் மனு அளித்தனர்.