சமுதாயக் கூடங்கள் ஏழைகளுக்கு வாடகை இன்றி வழங்கப்படும்: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

வெள்ளி, 26 பிப்ரவரி 2016 (15:17 IST)
சமுதாயக் கூடங்கள் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



 


 
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பட்ஜெட்டை நிதிக்குழு தலைவர் சந்தானம் தாக்கல் செய்தார்.
 
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இது குறித்து கூறியிருப்பதாவது:–
 
பெருநகர சென்னை மாநகராட்சியின் சமுதாய நலக்கூடங்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
 
முதலமைச்சர் அம்மாவின் பிறந்தநாளையொட்டி மேற்கண்ட சமுதாய நலக்கூடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்படும்.
 
பராமரிப்பு தொகை மட்டும் பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்படும். இந்த தொகையானது சம்பந்தப்பட்ட சமுதாய நலக்கூடங்களின் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு மட்டும் செலவு செய்யப்படும்.
 
இதற்கென சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் வங்கி கணக்கு துவக்கப்பட்டு வசூலிக்கப்படும் தொகையை வங்கியில் செலுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்