இன்று முதல் கடலோர மாவட்டங்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சனி, 28 நவம்பர் 2015 (07:30 IST)
கடலோர மாவட்டங்களில் இன்று முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.


 

 
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ரமணன் கூறியுள்ளார்.
 
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளதாக கூறியுள்ள ரமணன், அதிக பட்சமாக கேளம்பாக்கம் பகுதியில் 4 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், அடுத்த படியாக குடவாசல் பகுதியில் 3 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
 
கடந்த இரண்டு வாரங்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும், ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்