கர்ப்பிணியை கண்டதும் வாகனத்தை நிறுத்திய முதல்வர்: குவியும் பாராட்டு!

வியாழன், 21 அக்டோபர் 2021 (09:08 IST)
செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாலையோரம் காத்திருந்த நிறைமாத கர்ப்பிணியை கண்டு வாகனத்தை நிறுத்த கூறி அவர் கொடுத்த மனுவை பெற்றுகொண்டார்
 
பூவிருந்தவல்லி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான சாரதா. சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தமது கணவருக்கு வேலை வாய்ப்பு வழங்க கோரி முதல்வரிடம் மனு அளிக்க காத்திருந்தார் 
 
தான் செல்லும் வழியில் கர்ப்பிணி ஒருவர் மனு அளிக்க காத்திருப்பதை கண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் உடனே வாகனத்தை நிறுத்த கூறி அந்த பெண்ணிடம் இருந்து மனுவை பெற்றுகொண்டார். அப்போது மனு மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறியதாக தெரிவித்ததாக சாரதா கூறியுள்ளார். இதனையடுத்து முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்