மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை செய்த பின்னர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஞாயிறு அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்றும் இரவு நேர ஊரடங்கிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.