ஜெயலலிதா இன்று டிஸ்சார்ஜ்?

வெள்ளி, 28 அக்டோபர் 2016 (12:17 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 37 நாட்கள் ஆகின்றன. ஆனால் அவர் எப்பொழுது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்காமல் உள்ளது.


 
 
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது அவர் இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருப்பார் என பல அறிக்கைகள் வெளிவந்தன. பின்னர் அவருக்கு சில பிரச்சனைகள் இருப்பதாகவும் பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
 
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அப்பல்லோ அறிக்கைகளுக்கும் சிறிது காலம் ஓய்வு கொடுக்கப்பட்டது. பின்னர் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ நிர்வாகம் அவர் நலமுடன் இருக்கிறார் எனவும், பேசுகிறார் எனவும் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது.
 
அவர் சைகை மூலமாக பேசுகிறார், தானாக எழுந்து உட்காருகிறார் என பல தகவல்கள் வந்தன. இதனையடுத்து அவர் உடல் நிலை தேறியுள்ள நிலையில் தீபாவளியை எங்கு கொண்டாடுவார் என்ற விவாதமே சமூக வலைதளங்களில் நடைபெறுகிறது.
 
முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் கார்டன் இல்லத்திற்கு கொண்டு செல்ல அங்கு பிரம்மாண்ட லிஃப்ட் வசதிகள் மற்றும் விரிவாக்க பணிகள் நடந்து வந்தன. இதனையடுத்து ஜெயலலிதா தீபாவளிக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி போயஸ் கார்டன் வந்துவிடுவார் என பரவலாக பேசப்பட்டது.
 
சசிகலா தரப்பு முதல்வர் ஜெயலலிதாவை வீட்டுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க விருப்பம் காட்டுவதாக செய்திகள் வந்தன. ஆனால் மருத்துவர்கள் முதல்வர் முழுமையாக குணம் பெற்ற பின்னரே டிஸ்சார்ஜ் செய்ய முடியும் என கூறியதாகவும் கூறப்படது.
 
இந்நிலையில் சசிகலாவை சந்தித்த ஜோதிடர்கள் முதல்வர் ஜெயலலிதா தீபாவளிக்கு பின்னர் தான் டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என நாள் குறித்து கொடுத்ததாகவும் தகவல்கள் வந்தன.
 
ஆனாலும் அவர் தீபவளிக்கு முன்னர் போயஸ் கார்டன் திரும்புவார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தன. ஜெயலலிதா தற்போது நல்ல குணமாகிவிட்டார். மெதுவாக பேசுகிறார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி பலனளிக்கிறது எனவே தீபாவளிக்கு முன்னரே அவர் போயஸ் கார்டனுக்கு சென்று சிகிச்சையை அங்கு தொடர்வார் என தகவல்கள் வந்தன.
 
இந்நிலையில் இந்த சந்தேகம் இன்று பிற்பகல் தெளிவாகும் என கூறப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனையிடம் இருந்து இன்று மாலை அறிக்கை வரும் எனவும், அவர் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு உள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்