முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: மருத்துவர்கள் தொடர் சிகிச்சை

சனி, 12 நவம்பர் 2016 (10:48 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது.


 
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் தேவைப்படுவதால் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
முதல்வர் ஜெயலலிதா இயற்கையாகவே சுவாசிக்க தொடங்கியதால் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டு, அவசர தேவைக்காக அவரது தொண்டை பகுதியில் பொருத்தப்பட்ட டிராகோடமி கருவி மட்டும் அகற்றப்படாமல் இருந்தது.
 
இந்நிலையில் தனி வார்டுக்கு மாற்றப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் தேவைப்படுவதால் அவர் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்