முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.111 கோடி குவிந்தது

புதன், 16 டிசம்பர் 2015 (06:25 IST)
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை சுமார் ரூ.111 கோடி குவிந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் கடந்த 15 ஆம் தேதி பலர் நிதியுதவி வழங்கினார்கள்.
 
இதில், என்.ஏ.சி. ஜுவல்லர்சின் மேலாண்மை இயக்குனர் அனந்தபத்மநாபன் ரூ.25 லட்சம்,  கரூர் வைஸ்யா வங்கி சார்பில் ரூ.2 கோடி, மற்றும் வங்கி பணியாளர்களின் ஒருநாள் சம்பளமாக ஒரு கோடி ரூபாய் என மொத்தம் ரூ.3 கோடி, செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா ரூ.3 கோடி, கோயம்புத்தூர், லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு ரூ.2 கோடி என பலர் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.  அதன்டி, இன்று மட்டும், ரூ.12 கோடியே 31 லட்சம் ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு  வழங்கியுள்ளனர்.
 
ஆக மொத்தம், இதுவரை 111 கோடியே 8 லட்சத்து 22 ஆயிரத்து 745 ரூபாய்  முதல்வர் பொது நிவாரண நிதியாக பலர் வழங்கியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்