போனை எடுக்காத எடப்பாடி; கொந்தளித்த தினகரன்: தூக்கியெறியப்பட்ட பின்னணி!

புதன், 19 ஏப்ரல் 2017 (09:24 IST)
அதிமுகவில் இருந்து தினகரனையும் அவரது குடும்பத்தையும் வெளியேற்றும் முடிவுக்கு வந்துவிட்டனர் அதிமுக அம்மா அணியினர். தமிழக அமைச்சர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி இந்த அதிரடி முடிவை நேற்று இரவு அறிவித்தனர்.


 
 
இந்த அதிரடி முடிவு திடீரென ஒரு இரவில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். டிடிவி தினகரனும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மோதிக்கொண்டதின் விளைவு தான் இது.
 
கடந்த சில நாட்களாகவே தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க மேலிடத்தில் இருந்து அதிமுக அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை அறிந்து கொண்ட தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரண்டு மூன்று முறை போன் செய்திருக்கிறார். ஆனால் முதல்வர் அந்த போன் காலை எடுக்கவே இல்லை.
 
இதனால் கோபமடைந்த தினகரன் கடைசியாக ஏப்ரல் 17-ஆம் தேதி காலை மீண்டு போன் செய்திருக்கிறார். அப்போது முதல்வரின் பி.ஏ போனை எடுத்து முதல்வர் பிஸியாக இருக்கிறார் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த தினகரன் அவர் மட்டும் தான் பிஸியாக இருக்கிறாரா. நாங்க எல்லாம் வேலவெட்டி இல்லாமல் இருக்கோமா என கொந்தளித்திருக்கிறார்.
 
இதனை அறிந்துகொண்ட முதல்வர் தனது அறையில் உள்ள தனி அறை ஒன்றுக்கு சென்று தினகரனுக்கு போன் செய்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான சொற்போர் வெடித்துள்ளது. இருவரும் எல்லையை மீறி கோபத்தில் கொந்தளித்திருக்கிறார்கள். இதனையடுத்து தான் எடப்பாடி அன்று இரவே அமைச்சர்களை தொடர்புகொண்டு தினகரனுக்கு எதிராக முடிவெடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்