வைகையாற்றில் நெரிசல் - உதவி எண் அறிவிப்பு!

சனி, 16 ஏப்ரல் 2022 (10:25 IST)
மதுரையில் வைகையாற்றில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 2 பேர் இறந்த நிலையில் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதால் அதை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 
 
பின்னர் அங்கு கூடிய பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய போது கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் இதனைத்தொடர்ந்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 9498042434 என்ற எண்ணில் விவரம் அறியலாம் என தெரிவிக்கப்பட்டது. நெரிசலில் சிக்கி உறவினர்கள் காணாமல் போயிருந்தால் உதவி என்னை தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.   

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்