சின்ன சின்னம்மா பேரவை: இது நம்ம டிசைன்லயே இல்லையே!

புதன், 14 டிசம்பர் 2016 (16:46 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவையொட்டி அதிமுகவின் தலைமை பதவியான பொது செயலாளர் பதவியை ஏற்க வாருங்கள் சின்னம்மா என சசிகலாவை அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்துவதாக செய்திகள் வருகின்றன.


 
 
ஜெயலலிதா இருக்கும் போது சசிகலாவை யாரும் வெளிப்படையாக புகழ மாட்டார்கள். சில சமயம் சசிகலாவுக்கு பேனர் வைத்தவர்களை கூட ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்.
 
இந்நிலையில் ஜெயலலிதா தற்போது இறந்து விட்டதால். அதிமுகவினர் சிலர் சசிகலா தான் தங்கள் அடுத்த தலைவி எனவும் அம்மா ஜெயலலிதாவின் இடத்தை சின்னம்மா சசிகலா தான் ஏற்க வேண்டும் என கூறுகின்றனர். சின்னம்மா தான் அடுத்த அம்மா என்கிற நிலமைக்கு வந்துவிட்டனர் அதிமுகவினர்.
 
இதனையடுத்து அம்மா, சின்னம்மா என இருந்த அதிமுகவில் டிசைனில் இல்லாத சின்ன சின்னம்மா என்ற புதிய கோஷம் உருவாகியுள்ளது. சின்ன சின்னம்மா பேரவை, கோட்டூர், தஞ்சாவூர் மாவட்டம் என்ற பெயரில் ஒரு பேனர் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.
 
ஜெயலலிதா இருக்கும் போது சசிகலா எப்படி அவரது நிழலாக வலம் வந்தாரோ அதே போல தற்போது இளவரசி சசிகலாவின் நிழலாக வருவாரோ என தற்போதே அவருக்கு தூபம் போட ஆரம்பித்துள்ளனர் சிலர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்