ஆனால் அவர் ஜெ.வின் மகள் அல்ல. அவர் என் குடும்ப நண்பர். தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என பாடகி சின்மயி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தோடு, அந்த பெண் தற்போது அவருடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் “ இவர்கள் எங்களின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். பாரம்பரியமான ஒரு இசைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆனால், அவர்தான் ஜெ.வின் மகள் என்று இணையத்தில் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இது விஷமிகள் செய்த வேலை. இந்த விவகாரம் அவர்களது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.