அமைச்சர்களுக்கு கெடு வைத்தாரா முதல்வர்?

வியாழன், 9 ஜூன் 2016 (13:12 IST)
சிறப்பாக செயல்படாத அமைச்சர்கள் விரைவில் மாற்றப்படுவார்கள் என முதல்வர் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 

 
நடைபெற்றுள்ள தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 
 
இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். அதே போல, புதியவர்களுக்கும்,   அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 
 
கூடவே, கரூர் விஜயபாஸ்கர், ஈரோடு கருப்பண்ணன், ராமநாதபுரம் மணிகண்டன் ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் வாரி வழங்கியுள்ளார்.
 
அதிமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும், இல்லை எனில், அடிக்கடி அமைச்சரவை மாற்றம் செய்ய வேண்டி உள்ளது. இதனால், சிறப்பாக செயல்படும் அமைச்சர்களை அமைச்சரவையில் நிரந்தரமாக வைத்துக் கொள்ள முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளாதாக தகவல் பரவி வருகிறது. 
 
எனவே, புதிய அமைச்சர்கள் செயல்பாடுகள் சிறப்பாக இல்லாத பட்சத்தில், அவர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விதி கடந்த கால அமைச்சர்களுக்கும் பொருந்துமாம். 
 
ஆகையால், அமைச்சர்கள் அனைவரும் 6 மாத காலத்திற்குள் தங்களது துறையில் தனி முத்திரையும், சாதனையும் படைக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறாராம். 
 
இல்லை எனில் அமைச்சரவை மாற்றம் உறுதி என முதல்வர் எண்ணுவதாக அதிமுக வட்டார தகவல் தெரிவிக்கின்றன. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்